புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு நகரம் முழுவதும் வித்தியாசமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாள் நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான சார்பட்டா படம் தொடங்கி ரஜினியின் தர்பார் வரை, அந்த கதாபாத்திரங்களில் முதலமைச்சர் ரங்கசாமியை வைத்து அழகு பார்த்துள்ள அவரது ஆதரவாளர்கள், ஒரு படி மேலே சென்று, நடுக் கடலில் அமைந்துள்ள பழமையான துறைமுகத் தூண்களுக்கிடையிலும் அவருக்கு பேனர் வைத்து விசுவாசத்தை அள்ளி வீசியுள்ளனர்.