லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எச்.எஸ்.பி.சி வங்கியின், வரிக்கு முந்தைய அரையாண்டு லாபம் சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும் போது இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கத்தால் குறைந்த லாபமே இந்நிறுவனம் ஈட்டும் என்று வல்லுநர்கள் கணித்திருந்த நிலையில், ஹாங்காங் மற்றும் பிரிட்டனில் பொருளாதாரம் மீண்டெழுந்து வருவதால் கணிப்புகளை மீறி HSBC லாபம் ஈட்டி உள்ளது.