சிறு நகரங்களில் விற்பனை அலுவலர்களாக 20 ஆயிரம் பேரைப் பணியமர்த்த உள்ளதாகப் பேடிஎம் தெரிவித்துள்ளது.
நிதிச் சேவைகள் நிறுவனமான பேடிஎம் மின்னணுப் பணம் செலுத்து முறைக்கு மாறுவது பற்றி வணிகர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் நாடு முழுவதும் 20 ஆயிரம் விற்பனை அலுவலர்களைப் பணியமர்த்த உள்ளது.
இதற்காகப் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு படித்த இளைஞர்களைத் தேர்வு செய்து பணியமர்த்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதில் பெண்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும் வகையில் அவர்களை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.