பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரத்தால் அவையில் அமளி ஏற்பட்டபோது, எதற்கும் ஒரு எல்லை உண்டு என மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு எச்சரித்தார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடங்கிய நாளில் இருந்தே, புதிய வேளாண் சட்டங்கள், பெகாசஸ் விவகாரத்தை எழுப்பி, எதிர்க்கட்சிகள் அவை நடவடிக்கைகளை முடக்கி வருகின்றன.
இன்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், உளவுபார்ப்பதை நிறுத்து என எழுதப்பட்ட பதாகைகளுடன் அமளியில் ஈடுபட்டனர். அப்போது விசில் சத்தம் எழுந்ததை கவனித்த அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, அவையில் கண்ணியம் காக்குமாறு குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல மக்களவையிலும் அடுத்தடுத்து அமளி ஏற்பட்டு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.