தாலிபான்கள் ராணுவ அமைப்பு அல்ல, சாதாரண பொதுமக்கள் தான் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதைத் அடுத்து, அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தாலிபான்களின் இனமான பஸ்தூன் இனத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 30 லட்சம் ஆப்கான் அகதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருப்பதாக கூறினார்.
மேலும், ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக தாலிபான் அமைப்புகளுக்கு ராணுவ ரீதியாகவும், நிதி ரீதியாகவும் பாகிஸ்தான் உதவி செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டை இம்ரான்கான் மறுத்துள்ளர்