டெல்லியை சேர்ந்த 61 வயது பெண் மருத்துவர், 3 முறை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான முதல் நபர் என்பது பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையாக ஏற்பட்ட பாதிப்புகள் 22 நாட்கள் இடைவெளியில் ஆல்பா மற்றும் டெல்டா தாக்குதலால் ஏற்பட்டதும், 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு தொற்று ஏற்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒருமுறை தொற்று ஏற்பட்டால் மறுதொற்று ஏற்படுவதற்கு சராசரியாக 45 முதல் 90 நாட்கள் எடுத்துக் கொள்ளும் என அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி மையமும், 104 நாட்கள் ஆகும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் கூறுகின்றன. ஆனால் மூன்று முறை தொற்றுக்கு ஆளான டெல்லி மருத்துவருக்கு 19 நாட்கள் இடைவெளியில் மறுதொற்று ஏற்பட்டதால் அதுகுறித்து ஆய்வு செய்யப்படுகிறது.