கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் கேரள அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளத்தில் புதிதாக 22 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் கேரள அரசு போதிய அளவு கவனம் செலுத்தவில்லை என்றும், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதிலேயே கவனம் செலுத்துவதாகவும் மத்திய நலவாழ்வு அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய கொரோனா பாதிப்புகளில் பாதியைக் கேரளமும், மகாராஷ்டிரமும் கொண்டிருப்பதாகவும், அவற்றின் மருத்துவக் கட்டமைப்புகள் நல்ல முறையில் உள்ளதால் உயிரிழப்புகள் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.