கொரோனா மூன்றாம் அலை வரும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ள ஏதுவாக, சென்னையில் புதிதாக மூன்று ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
முதற்கட்டமாக சென்னை தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையில் நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வகையில் உற்பத்தி மையம் அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படவுள்ளது. மேலும், மணலி மற்றும் ஈஞ்சம்பாக்கத்தில் புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளது.