ஒலிம்பிக் பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற, மீராபாய் சானுவுக்கு சொந்த மாநிலமான மணிப்பூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தலைநகர் இம்பால் விமான நிலையம் வந்த மீராபாயை, முதலமைச்சர் பிரன்சிங் நேரில் சென்று வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து காரில் சென்ற அவருக்கு, சாலையின் ஓரத்தில் நீண்ட வரிசையில் நின்ற மக்கள் பதாகைகளை ஏந்தி வரவேற்பு அளித்தனர்.
பின்னர் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய மீராபாய், மணிப்பூர் மக்களின் ஆதரவால் ஒலிம்பிக்கில் தமக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அந்த விழாவில், மீராபாய்க்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.
மீராபாய்க்கு, மணிப்பூர் அரசு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்குவததாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.