உள்நாட்டில் தடையின்றி கிடைக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும், மசூர் பருப்பு மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு முழுமையாக நீக்கி உள்ளது.
அத்துடன் அதன் மீதான வேளாண் கட்டமைப்பு வளர்ச்சி செஸ் வரியும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை மாநிலங்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டார்.
அமெரிக்கா தவிர இதர நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மசூர் பருப்பின் மீது உள்ள 10 சதவிகித சுங்கவரியும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் கிலோவுக்கு 70 ரூபாயாக இருந்த மசூர் பருப்பின் விலை 30 சதவிகிதம் வரை உயர்ந்து 100 ரூபாயை எட்டியுள்ள நிலையில், விலை உயர்வைத் தடுக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.