கர்நாடகாவில் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்யும் பணிகள் சூடு பிடிக்க தொடங்கி உள்ளன.
எடியூரப்பா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அமைச்சரவையை கலைத்து புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்க ஆளுநர் உத்தரவிட்டார். இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் பதிவிக்கு ஏறத்தாழ 8-க்கும் மேற்பட்டோரிடம் கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வரிசையில் எடியூரப்பா அமைச்சரவையில் சுரங்கம் மற்றும் புவியியல் துறையின் அமைச்சராக இருந்த முருகேஷ் நிராணி, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வின் மேலிட பொறுப்பாளராக இருந்த சி.டி. ரவியின் பெயரும் முதலமைச்சர் பட்டியலில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை, பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், அரவிந்த் பெல்லாட், முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோரும் போட்டியில் நீடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.