கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக தலித் ஒருவரை மேலிடம் நியமித்தால் தமக்கு பிரச்சனை எதுவும் இல்லை என எடியூரப்பா கூறியுள்ளார். பெலகாவியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது தாம் முதலமைச்சராக தொடர்வேனா இல்லையா என்பதை கட்சித் தலைமைதான் முடிவு செய்து அறிவிக்கும் என கூறினார். லிங்காயத் சமுதாயத்தில் வலுவான தலைவராக கருதப்படும் எடியூரப்பாவுக்கு பதிலாக, அதே சமூகத்தை சேர்ந்த ஒருவரையே பாஜக தலைமை புதிய முதலமைச்சராக நியமிக்கும் என முதலில் கூறப்பட்ட நிலையில், இப்போது தலித் ஒருவர் முதலமைச்சராக வரலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.