பெங்களூருவில் பல்பொருள் அங்காடிக்குள் சிறுமி பணம் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
யஷ்வந்த்பூரில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் திடீரென நுழைந்த கும்பலை, உரிமையாளர் வெளியேற்ற முயன்றார். அப்போது அந்த கும்பலை சேர்ந்த சிறுமி கடையின் கல்லா பெட்டியை திறந்து ரூபாய் கட்டுக்களை அள்ளிக் கொண்டு எதுவும் தெரியாது போல் கடையை விட்டு வெளியே சென்றார்.
பெண்கள் கும்பல் சென்றதை அடுத்து கல்லா பெட்டியை திறந்து பார்த்த உரிமையாளருக்கு 11 ஆயிரம் ரூபாய் காணாமல் போய் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரை அடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.