சென்னையில் தேர்தலுக்கு முன் சாலை சீரமைப்புக்காக 660 ஒப்பந்தங்கள் போடப்பட்ட நிலையில், சாலைகள் நல்ல நிலையில் இருப்பது ஆய்வில் தெரியவந்ததை அடுத்து, ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பெருங்குடி, வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், அண்ணாநகர் மண்டலங்களிலுள்ள சாலைகளை சீரமைக்க தேர்தலுக்கு முன் பிப்ரவரி மாதம் சுமார் 43 கோடி ரூபாயில் 660 ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
இந்த ஒப்பந்தங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 3200 சாலைகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறும் பொறியாளர்கள் அடங்கிய குழுவுக்கு புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், மேற்குறிப்பிட்ட 3200 சாலைகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும், அவற்றை சீரமைப்பதற்கான தேவை தற்போது இல்லை எனவும் குழு அறிக்கை தாக்கல் செய்ததை அடுத்து சாலை சீரமைப்புக்கான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.