தீவிரவாதச் செயலில் ஈடுபட்டதாகக் கூறி 13 ஆர்மீனிய ராணுவ வீரர்களுக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து அஸர்பைஜான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் உள்ள நாகோர்னோ - காரபாக் என்ற பகுதிக்காக கடந்த ஆண்டு கடும் போர் நடந்தது. போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி 60க்கும் மேற்பட்ட ஆர்மீனிய ராணுவ வீரர்களை அஸர்பைஜான் கைது செய்துள்ளது.
இந்நிலையில் அவர்களில் 13 பேர் மீது குற்றவியல் நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் எல்லை தாண்டுதல், ஆயுதங்கள் வைத்திருந்தல், தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் அவர்களுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அதன் பின்னர் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என அஸர்பைஜான் அரசு தெரிவித்துள்ளது.