காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 4-ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணி, கவுன்டி லெவன் அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர், கவுன்டி அணி சார்பில் விளையாடினார். அப்போது, முகமது சிராஜ் வீசிய பந்து வாஷிங்டன் சுந்தரின் கை விரலில் பலமாக தாக்கியதில், எலும்பு முறிவு ஏற்பட்டது.
காயம் குணமடைய குறைந்தபட்சம் 5 வாரமாகும் என்பதால் அவர் டெஸ்ட் தொடரில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.