நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூட உள்ள நிலையில், மாநிலங்களவையை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒப்புதல் அளித்துள்ளன.
ஆயினும் மக்களவையில் பெகாஸஸ் விவகாரத்தால் அலுவல்கள் முடங்கும் நிலை காணப்படுகிறது. மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் இரண்டு நாட்களுக்கு எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கின.
மாநிலங்களவை மட்டும் மூன்று மணி நேர முடக்கத்துக்குப் பிறகு மீண்டும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து விவாதித்தது. பக்ரீத் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூட உள்ளன.
அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மக்களவையில் போராட்டத்தைத் தொடரவும் மாநிலங்களவையில் விவாதிக்கவும் எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.