குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியன நாட்டின் எந்தக் குடிமகனுக்கும் எதிரானவை இல்லை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் குவகாத்தியில் பேசிய அவர், மதச்சார்பின்மை, பொதுநலக் கொள்கை, ஜனநாயகம் ஆகியன இந்தியாவின் பாரம்பரியத்திலும் இரத்தத்திலும் ஊறியவை என்றும், அவற்றை இந்தியா நடைமுறைப்படுத்தி வருவதால் உலக நாடுகளிடம் பாடங்கற்க வேண்டியதில்லை என்றும் தெரிவித்தார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு எந்த இழப்புமில்லை எனத் தெரிவித்தார். பிரிவினைக்குப் பின் சிறுபான்மையினரின் நலன் காப்பதாக உறுதியளித்ததை இந்தியா இதுவரை மதித்து நடப்பதாகவும், பாகிஸ்தான் மதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.