பிளாஸ்டிக்கு பயன்பாட்டை முழுமையாக தடுக்கும் வகையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வரவேண்டாமென பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
கோவில்களில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் விற்கக் கூடாது, மாறாக செம்பு மற்றும் ஸ்டீல் பாட்டில்களில் பக்தர்களுக்கு தண்ணீர் விற்க வேண்டும் என்றும், திருமலையிலுள்ள உள்ளூர் வாசிகள், வர்த்தகர்கள் இரண்டு மாதங்களுக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.