பக்ரீத் பெருநாளையொட்டி இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தான், வங்கதேச எல்லைப் பகுதிகளில் உள்ள அந்த நாடுகளின் படையினருக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.
ராஜஸ்தானின் பார்மரில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரும், பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் வீரர்களும் ஒருவருக்கொருவர் இனிப்புகளையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
இதேபோல் அசாம், மேற்கு வங்க மாநிலங்களையொட்டி எல்லைக் காவல் பணியில் ஈடுபட்டுள்ள வங்கதேச வீரர்களுக்கும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர்