மத்திய அரசை ராகுல்காந்தி விமர்சித்த நிலையில், அதற்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் இத்தாலி மொழியில் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இன்றி இறப்பு நேர்ந்ததாக மாநிலங்களிடமிருந்து எந்தத் தரவும் வரவில்லை என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. இந்த விளக்கத்தை டுவிட்டரில் டேக் செய்த ராகுல்காந்தி, இது ஆக்சிஜன் பற்றாக்குறை மட்டுமல்ல, உணர்வும் உண்மையும் கூடப் பற்றாக்குறைதான் என்பதைக் காட்டும் வகையில் உள்ளதாக டுவிட்டரில் இந்தியில் விமர்சித்திருந்தார்.
இதற்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் டுவிட்டரில் இத்தாலி மொழியில் பதிலளித்துள்ளார். அதில் பொய்சொல்வதை ராகுல் காந்தி நிறுத்த வேண்டும் என்றும், ஆக்சிஜன் இன்றி இறப்போரின் விவரங்களைத் தொகுப்பது மாநில அரசுகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.