பக்ரீத்தை ஒட்டி ஊரடங்கில் இருந்து 3 நாட்கள் தளர்வு அறிவித்த கேரள அரசின் நடவடிக்கை தேவையற்றது மற்றும் மக்களின் உயிரோடு விளையாடுவது போன்றது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பக்ரீத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள் தளர்வுகளை கடந்த சனிக்கிழமை கேரள அரசு அறிவித்தது. அதை ரத்து செய்ய வேண்டும் என தாக்கலான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று அதன் கடைசி நாள் என்பதால் இனி அதை ரத்து செய்தால் எந்த பயனும் இல்லை என கூறியது.
அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து கேரள அரசு இந்த 3 நாள் தளர்வை அறிவித்துள்ளதாகவும், இது மக்களின் உயிரோடு விளையாடுவது போன்றதாகும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த தளர்வின் காரணமாக யாருக்காவது விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டால் அவர்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்ற நீதிபதிகள், அப்போது நடவடிக்கை எடுக்கத் தயார் என்றும் கூறினர்.