மும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக அங்கு உள்ளூர் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நாள் முழுவதும் மழை பெய்ததைத் தொடர்ந்து விக்ரோலி மற்றும் பாண்டுப் இடையேயான தடங்களில் நீர் புகுந்ததால் மத்திய ரயில்வேயின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியிருப்பதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், சில ரயில்கள் தடம் மாற்றப்பட்டும் இயக்கப்படுகின்றன.
மும்பையின் கிழக்குப் புறநகர் பகுதியில் திங்கள்கிழமை இரவு வரை 90 மில்லி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. இதையடுத்து மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது.