ஆப்கானில் தாலிபன்களால் கொல்லப்பட்ட இந்திய புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக்கியின் உடல் விமானம் மூலம் நேற்று மாலை டெல்லி கொண்டு வரப்பட்டது.
செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் எடுத்த முயற்சியால் அவர் உடல் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று ஜாமியா மில்லியா இஸ்லாமிய கல்லறையில் அவர் உடலுக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
ஆப்கான் அதிகாரிகள் அளித்துள்ள டேனிஷ் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் உடலில் ஏராளமான துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.