மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக நீட் வினாத்தாளில், 180 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண் வழங்கப்படும். இந்த ஆண்டு முதன் முறையாக வினாத்தாளில் சாய்ஸ் அடிப்படையில் பதிலளிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு பாடத்திலும் ஏ பிரிவில் 35, பி பிரிவில் 15 என நான்கு பாடங்களுக்கு தலா 50 கேள்விகள் வீதம், மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும்.
இவற்றில் 180 கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தால் போதும். பி பிரிவிலுள்ள 15 கேள்விகளில் சாய்ஸ் அடிப்படையில், தங்களுக்கு நன்றாக விடை தெரிந்த, 10 கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தால் போதும். பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாததாலும், பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாலும், இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.