கொரோனாவைத் தடுப்பதற்கு வெவ்வேறு தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வது ஆபத்தானது என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மையத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் , தரவுகள் அல்லது சான்றுகள் இல்லாத இடத்தில் வசிக்கும் மக்கள் கொரோனாவுக்கு வெவ்வேறு தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வதாக வந்த செய்தி கவலையளிப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது என்று குறிப்பிட்ட சவுமியா, இந்தியாவில் கோவிஷீல்ட் என அழைக்கப்படும் அஸ்ட்ராஜெனெகாவுக்குப் பிறகு ஃபைசர் நிறுவனத்தின் எம்ஆர்என்ஏ என்ற தடுப்பூசி பாதுகாப்பானது எனத் தெரிவித்தார். இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர், ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தேவைப்பட்டால் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் சவுமியா சுவாமிநாதன் கூறினார்.