ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவில் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்ய புனேயில் உள்ள சீரம் இந்தியா நிறுவனம் உரிமை பெற்றுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் விடுத்த அறிக்கையில், ஆண்டுக்கு 30 கோடி டோஸ்கள் ஸ்புட்னிக் வி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
தேவையான தொழில்நுட்ப உதவிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் மூலம் சாம்பிள்களை சீரம் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.