லடாக் எல்லையில் சீனப்படையினரை எதிர்கொள்ள ரபேல் விமானங்களுடன் இரண்டாவது விமானப்படைப் பிரிவு வரும் 26 ஆம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் உள்ள ஹாஸிமிரா விமானப்படைத்தளத்தில் இயங்க உள்ளது.
ஏற்கனவே 25 ரபேல் விமானங்கள் இந்தியா வந்துள்ள நிலையில், அவற்றில் சில ஹாஸிமிராவுக்கு மாற்றப்பட உள்ளன. 18 ரஃபேல் விமானங்கள் பாகிஸ்தான் மற்றும் மேற்கு எல்லையைக் கண்காணிக்க அம்பாலா விமானப்படைத் தளத்தில் நிறுத்திவைக்கப்பட உள்ளன.
பிரான்சில் இருந்து மீதமுள்ள விமானங்கள் வந்தவுடன், ஹாஸிமிராவில் சீனாவைக் கண்காணிக்கும் வகையில் 18 ரஃபேல் விமானங்கள் தயார்நிலையில் வைக்கப்படும்.