காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என ஸ்விட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ஸ்விட்சர்லாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த ஒரு நிகழ்வையும் தான் சிறப்பாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். விளையாடும் போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலக நேரிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
முழு ஸ்விட்சர்லாந்து அணிக்கும் அதிர்ஷ்டத்தையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக ரோஜர் ஃபெடரர் தெரிவித்துள்ளார்.