தொலைக்காட்சி மற்றும் சமூகத் தொடர்பு ஊடக விவாதங்களில் இனி, அதிமுக பங்கேற்காது என அக்கட்சி, திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக வெளியிட்டு உள்ள அறிக்கையில், அதிமுக தலைவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் விவாத தலைப்புகள் இடம்பெறுவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர்.
எனவே, அதிமுகவை பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறிக் கொண்டு, வேறு யாரையாவது வைத்து, விவாத நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.