நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டுமானால் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது அவசியம் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.
உலக மக்கள் தொகை தினத்தை ஒட்டி வெளியிட்ட செய்தியில், நாட்டின் மொத்த வருமானத்தை உயர்த்தவும்,மக்களுக்கு நல்ல வாழ்க்கை தரத்தை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், அது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தர பிரதேச அரசு மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதாவை அறிமுகம் செய்துள்ள நிலையில், சரத் பவாரும், மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கு ஆதரவாக பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.