இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, புவி ஆய்வுக்கான 'ஜிசாட் - 1' செயற்கைக்கோளை அடுத்த மாதம் 12ந்நேதி விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய இஸ்ரோ அதிகாரி ஒருவர், இந்த செயற்கைக்கோளில் இந்தியாவின் நிலம் மற்றும் கடல் எல்லைகளை உடனுக்குடன் படம் பிடித்து பூமிக்கு அனுப்பும் வகையில் மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளன என்றார்.
இயற்கை பேரிடர் நிலவரத்தை கண்காணித்து, பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை கோள் வனம், விளைநிலம், கனிம வளம், பனிப் பிரதேசம் உள்ளிட்டவற்றின் தகவல்களை அறிந்து கொள்ளவும் உதவும் என்றார்.