மேற்கு வங்கத்தின் புவியியல் குறியீட்டு அங்கீகாரம் பெற்ற ஃபாசில் மாம்பழ வகை, பஹ்ரைனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக மத்திய தொழிற்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், பஹ்ரைனில் கடந்த ஜூன் மாதத்தில், ஒரு வார காலம் நடைபெற்ற இந்திய மாம்பழ ஊக்குவிப்பு நிகழ்ச்சியில் 16 வகையான மாம்பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பழங்களின் அரசன் என்று இந்தியாவில் அழைக்கப்படும் ஃபாசில் வகை மாம்பழங்களுடன் புவியியல் குறியீட்டு அங்கீகாரம் பெற்ற கிர்சப்பட்டி, லக்கன்போக், தஷ்ஷரி, அமராபாலி, சௌசா, லங்டா ஆகிய மாம்பழ வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக தொழிற்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.