பெல்ஜியம் அரசு கோவிஷீல்ட் தடுப்பூசி போடுபவர்களுக்கு பயண அனுமதியளிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது இதையடுத்து கோவிஷீல்ட்டுக்கு பயண அனுமதி வழங்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் 15வது நாடாக பெல்ஜியம் இடம் பெறுகிறது.
ஏற்கனவே ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, கிரீஸ், நெதர்லாந்து, ஸ்பெயின் உள்பட 14 நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளன.
ஆஸ்ட்ரா ஜெனிகாவும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் இணைந்து கண்டுபிடித்த கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் புனேயில் உள்ள சீரம் இந்திய நிறுவனம் தயாரித்து வருகிறது.
பெல்ஜியம் அரசு கோவிஷீல்ட்டை ஏற்றுக் கொண்டிருப்பது இந்தியாவுக்கு மிகவும் உதவக்கூடிய முடிவாக இருக்கும். வங்காளதேசம், நேபாளம், பூட்டான், இலங்கை ,மாலத்தீவுகள் போன்ற நாடுகளும் கோவிஷீல்ட்டை சார்ந்துள்ளன என்று பெல்ஜியம் அரசு அறிவித்துள்ளது