அதிகமாகப் பரவும் தன்மை கொண்ட கப்பா வகை உருமாறிய கொரோனா தொற்று உத்தரப் பிரதேசத்தில் இருவருக்கு இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
லக்னோ மருத்துவமனையில் இருந்து அனுப்பிய மாதிரிகளில் இருவருக்கு கப்பா வகை தொற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இருவரின் பெயர்களையோ, ஊரையோ, மாவட்டப் பெயர்களையோ அதிகாரிகள் வெளியிடவில்லை.
இந்த வகை கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை அளிக்க முடியும் என்பதால் இது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என மாநிலக் கூடுதல் தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.