கடந்த 2020 பிப்ரவரியில் நடைபெற்ற கலவரங்களைப் போல் மீண்டும் நடைபெற்றால் டெல்லி தாங்காது என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், இதில் பேஸ்புக் போன்ற சமூக ஊடங்களின் பங்கு என்ன என்பது விசாரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
முகநூலுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, முகநூலின் வாதங்களை ஏற்க மறுத்துவிட்டது.
இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் அதிகாரம் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களுக்கு யார் தந்தது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.