Spinal Muscular Atrophy எனும் அரியவகை மரபணு நோய்க்கான மருந்து வருகிற 10-ந் தேதி முதல் இந்தியாவிலேயே அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட நாமக்கலைச் சேர்ந்த மித்ரா என்ற குழந்தைக்கு வெளிநாட்டில் இருந்து மருந்து வாங்குவதற்காக பெற்றோர் மேற்கொண்ட நிதி திரட்டும் பிரச்சாரம் பெரும் கவனம் பெற்றது.
இதேபோன்று, நாட்டில் இந்த மரபணு நோயால் பாதிக்கப்படும் பல குழந்தைகளுக்கும் உலகிலேயே மிகவும் விலை அதிகமானதாக அறியப்படும் சுமார் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜோல்ஜென்ஸ்மா மருந்து அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டு செலுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், Spinal Muscular Atrophy என்றழைக்கப்படும் முதுகு தண்டு வட சிதைவுக்கு Roche நிறுவனம் கண்டுபிடித்துள்ள Risdiplam என்ற மருந்துக்கு அமெரிக்க மற்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. வரும் 10 ம் தேதி முதல், இந்திய சந்தையில் இந்த மருந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது.