மத நல்லிணக்கத்துக்கு இந்தியாவைப் பிற நாடுகள் பின்பற்ற வேண்டும் எனத் தலாய்லாமா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
திபெத் புத்த மதத் தலைவர் தலாய்லாமா அண்மையில் தனது பிறந்த நாளையொட்டிக் காணொலியில் கலந்துரையாடினார். அப்போது இந்தியா தான் தனது வீடு என எப்போதுமே கூறி வருவதாகத் தெரிவித்தார்.
மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் மத நல்லிணக்கமும் ஊடகச் சுதந்திரமும் இருப்பதாகத் தெரிவித்தார். மாபெரும் மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியா மத நல்லிணக்கத்துக்குச் சரியான எடுத்துக்காட்டாகத் திகழ்வதாகவும் தலாய்லாமா குறிப்பிட்டார்.