முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த கொள்ளை முயற்சியின்போது கொல்லப்பட்டார்.
டெல்லி வசந்த் விகாரில் உள்ள வீட்டில் அவர் குடியிருந்து வந்த நிலையில், நேற்றிரவு திடீரென உள்ளே புகுந்த மூவர் பணியாளைத் தாக்கியதுடன், கிட்டியைத் தலையணையால் முகத்தில் அமுக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மூச்சுத்திணறிய கிட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்துக் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். வீட்டில் பீரோ, பெட்டிகள் திறந்த நிலையில் இருப்பதால் கொள்ளை முயற்சியில் கொலை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிந்த காவல்துறையினர் கிட்டியின் வீட்டில் துணிகளைச் சலவை செய்துகொடுத்து வந்த ராஜு என்பவனைக் கைது செய்துள்ளனர். அவன் அளித்த தகவலின் அடிப்படையில் மற்ற இருவரைத் தேடி வருகின்றனர்.