ஜிஎஸ்டி வருவாய், 8 மாதங்களுக்குப் பின் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு கீழ் குறைந்துள்ளது.
ஜூன் மாதம் 92 ஆயிரத்து 849 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மூலம் கிடைத்திருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது, இது 2 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஊரடங்கு நடைமுறையில் இருந்ததே, ஜூன் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு கீழ் சரிந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.