போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் கிரிமினல்களை சுடுவது என்பதை ஒரு நடைமுறையாகவே மாற்ற வேண்டும் என அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
மாநிலத்தில் காவல்துறையின் தரத்தை சீரமைப்பது தொடர்பாக, காவல்நிலைய பொறுப்பு அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆனால் அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போலீசாருக்கு குற்றவாளிகளை சுட அதிகாரம் இல்லை என்றாலும், அவர்கள் தப்பிக்க முயற்சிக்கும் போது வேறு வழியில்லை என்றால் சுடலாம் என்ற பொருளில் கூறியதாக விளக்கம் அளித்தார்.
கடந்த மே மாதம் முதல் அசாமில், தப்பிக்க முயற்சித்த 12 கிரிமினல்களும், அரசுக்கு எதிராக செயல்பட்டு வருபவர்களும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அது ஒரு ஒரு நியாயமான செயலே என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.