பீகாரில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பெருந்தொற்று காரணமாக பீகாரில் கடந்த மே மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், குறிப்பிட்ட வயதைக் கடந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
50 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் தேர்வுகள் ஏதும் நடைபெறாது கல்வித்துறை தெரிவித்துள்ளது.