உள்நாட்டு விமானங்களில் 65 சதவிகிதம் வரை பயணிகளை ஏற்றிச் செல்ல விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக அமைச்சகம் சார்பில் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், உள்நாட்டு விமான பயணத்திற்கான அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு உள்நாட்டு விமானங்களில் இனி 65சதவீதம் பயணிகளை ஏற்றிச் செல்ல லாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை அமலில் இருக்கும் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.