கொரோனா பற்றிய தகவல் பெட்டகமாக கோவின் இணையதளத்தை உருவாக்கி உலக நாடுகளுக்கு இந்தியா வழங்கியுள்ளது.
இது தொடர்பான சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி இன்று காணொலி வழியாக உரையாற்ற உள்ளார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களும் மருத்துவ நிபுணர்களும் இதில் பங்கேற்க உள்ளனர்.
இந்தியாவில் தொடங்கப்பட்ட கோவின் இணையததளம் கொரோனா தகவல்கள், பரவல் கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி இயக்கம் போன்ற பல்வேறு விஷயங்களுக்கான தளமாக விளங்கி வருகிறது. இந்த தளத்தின் பயன்பாட்டை உலக நாடுகளுக்கு வழங்கத் தயாராக இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
கனடா, மெக்ஸிகோ, நைஜீரியா, பனாமா மற்றும் உகாண்டா உள்ளிட்ட சுமார் 50 நாடுகள் கோவின் இணையதளத்தை கொரோனா தொடர்பான பதிவுகளுக்கான பொதுத்தளமாக பயன்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றன.