அமெரிக்காவில் குடியிருந்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன் அபிமன்யு மிஸ்ரா, சதுரங்கப் போட்டியில் மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் ஆகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வசித்து வரும் அபிமன்யு மிஸ்ரா, ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நேற்று நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான 15 வயதுச் சிறுவன் லியோன் லூக் மெண்டோன்காவைத் தோற்கடித்தார். இதன்மூலம் உலகின் மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
2002ஆம் ஆண்டு ரஷ்யாவின் செர்ஜீ கர்ஜாக்கின் பன்னிரண்டரை வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றதே இதற்கு முன் சாதனையாக இருந்தது. 19 ஆண்டுக்காலமாக இருந்த சாதனையை அபிமன்யு மிஸ்ரா முறியடித்துள்ளார்.