இரண்டு குழந்தைகள் கொள்கையால் மட்டுமே அசாம் முஸ்லிம்களிடையே நிலவும் வறுமையையும் கல்வியறிவின்மையையும் போக்க முடியும் என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
2 குழந்தைகள் வரை பெற்றவர்களே அரசு வேலைவாய்ப்பு, நலத்திட்டங்களைப் பெற முடியும் என்பதைப் படிப்படியாக நடைமுறைப்படுத்த உள்ளதாகவும், அதற்குச் சட்டம் இயற்ற உள்ளதாகவும் அசாம் முதலமைச்சர் சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.
முஸ்லிம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எனக் கூறப்படுவதற்குப் பதிலளித்த அவர், இரு குழந்தைக் கொள்கைக்கு இஸ்லாமியர்களிடம் எந்த எதிர்ப்பும் இல்லை என்றும், இஸ்லாமிய அமைப்பினர் பலர் வரவேற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.