புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்பதில் ஏற்கனவே மத்திய அரசுடன் உரசல் போக்கை மேற்கோண்டு வரும் டுவிட்டர், இந்தியாவின் தவறான மேப்பை பிரசுரித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டுவிட்டரின் இணையதளத்தில் வேலைவாய்ப்புகள் தொடர்பான பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரையும், லடாக்கையும் காணவில்லை.
அதற்குப் பதிலாக இந்த பகுதிகள் சேர்ந்து தனி நாடாக குறிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வரைபடத்தை தவறாக பிரசுரிப்பதை டுவிட்டர் வாடிக்கையாகவே வைத்துள்ளது.
கடந்த ஆண்டு லடாக் தலைநகரான லே-வை சீனாவின் பகுதியாக டுவிட்டர் சித்தரித்து அதற்கு இந்தியாவின் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.