விண்வெளி வீரர்கள் இல்லாமல், ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை ஓட்டத்தை வரும் டிசம்பரில் நடத்துவதற்கான பணிகளை இஸ்ரோ முடுக்கிவிட்டுள்ளது.
இரு கட்டங்களாக இந்த சோதனை நடத்தப்படும். அதன் பின்னர் விண்வெளி வீரர்களுடன் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தை 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-க்குள் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக, திட்டத்திற்கு தேவையான ஹார்டுவேர் தயாரிப்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், வரும் டிசம்பருக்குள் முதல் சோதனை ஓட்டத்தை நடத்தி முடிக்கும் பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.