ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் வசிக்கும் கும்மா குடும்பத்தினர், திருமணத்தின் போது ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் வேடமணிந்து விநோத சடங்குகள் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
திருமண சடங்கின் ஒருபகுதியாக அங்கலம்மா மற்றும் போலராம்மா கிராம தேவதை கோயிலுக்கு சென்ற மணமக்கள், பெண் ஆணை போன்று கூர்தா பைஜாமாவுடனும், ஆண் பெண்ணை போன்று புடவை அணிந்தும் தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி வன்னி மரத்திற்கும் , நாக புற்றுக்கும் பூஜை செய்தனர்.