வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களிடம் பணியாற்றுவோரை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தி உள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் காணொலி மூலம் பேசிய அவர், இணைய பயன்பாட்டில் உள்ள வேறுபாடுகளை களையவும், கொரோனா பெருந்தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து நிதியுதவியை எதிர்நோக்கி இருக்கும் வழக்கறிஞர்களுக்கு உதவவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் வழக்கறிஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.